செய்திகள்

மது குடிக்க இடையூறு செய்த மனைவியின் மூக்கை அறுத்த கணவன்

Published On 2018-05-02 14:31 IST   |   Update On 2018-05-02 14:31:00 IST
உத்தர பிரதேசத்தில் தன்னை மது குடிக்க விடாமல் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மூக்கை அறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் நகரில் உள்ள பஹதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. 

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது ராஜேஷ்குமாருக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மது அருந்தக் கூடாது என சங்கீதா கூறியதால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

இதையடுத்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் மூக்கை அறுத்து விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர். சங்கீதாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க விடாமல் தடுத்த மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews

Similar News