செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் யாருக்கு? தலைமை வழக்கறிஞர் வாதம்

Published On 2018-04-27 09:22 GMT   |   Update On 2018-04-27 09:22 GMT
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே இருக்கும் நிலையில், அதனை ஒழுங்கு படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #MasterOfRoster
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்காக நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கும் அதிகாரமும், அமர்வுகளை அமைக்கும் அதிகாரமும் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது.

இந்த விஷயத்தில் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தை ஒழுங்குபடுத்தக்கோரி முன்னாள் சட்ட மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது வந்தது. இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த பொதுநல வழக்கை எதிர்த்து வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேனுகோபால் கூறியதாவது, “பல்வேறு நபர்கள் கையாளுவதற்கு இது சாதாரமான விவகாரம் அல்ல. வழக்குகளை ஒதுக்குவதில் பல நீதிபதிகள் தலையிடும் போது எந்த வழக்கு யாரால் விசாரிக்கப்படுகிறது என்ற குழப்பம் ஏற்படும்” என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். #MasterOfRoster
Tags:    

Similar News