செய்திகள்

வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைக்க அவகாசம் - மத்திய அரசு உத்தரவு

Published On 2018-04-01 03:10 GMT   |   Update On 2018-04-01 03:10 GMT
சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வெளியாகும்வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Aadhaar #PAN
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வெளியாகும்வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குடன் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அனைத்து வாடிக்கையாளர்களும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள்(அதாவது நேற்று) பான், ஆதாரை இணைக்க அவகாசமும் அளித்து இருந்தது.

இதை எதிர்த்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு கடந்த 13-ந்தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன் பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும்வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும். இணைப்பிற்கான புதிய அவகாச தேதி கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகு அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது. #Aadhaar #PAN
Tags:    

Similar News