செய்திகள்

பஞ்சாப் பொற்கோயிலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழிபாடு

Published On 2018-03-25 17:22 IST   |   Update On 2018-03-25 17:22:00 IST
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கிய பொற்கோயிலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வழிபாடு செய்தார். #ManmohanSingh #GoldenTemple
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் சீக்கிய மத பொற்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பயின்ற இந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடன் பயின்ற முன்னாள் மாணவ - மாணவியருடன் கலந்துரையாடினார்.

இன்று காலை தனது மனைவி குர்ஷரன் கவுருடன் சீக்கிய பொற்கோயிலில் அவர் வழிபாடு செய்தார். மன்மோகன் சிங்குக்கு கோயில் தலைமை குரு சார்பில் பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #tamilnews #ManmohanSingh #GoldenTemple

Similar News