செய்திகள்

ஜனாதிபதி உரை ஏமாற்றம் அளிக்கிறது - காங்கிரஸ் கருத்து

Published On 2018-01-29 20:32 GMT   |   Update On 2018-01-29 20:32 GMT
ஜனாதிபதி உரை ஏமாற்றம் அளிப்பதாகவும், உண்மை நிலையையும், தெரிந்த உண்மைகளையும் மறைப்பதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி உரை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

ஜனாதிபதி உரை ஏமாற்றம் அளிப்பதாகவும், உண்மை நிலையையும், தெரிந்த உண்மைகளையும் மறைப்பதாகவும் உள்ளது. பொருளாதாரம் வளர்ந்து உள்ளதாக உண்மைக்கு மாறாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை, நாட்டின் பொருளாதாரமும் உயரவில்லை. பண மதிப்பு இழப்பு என்ற அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி.யை தவறாக அமல்படுத்தியதாலும் நாட்டின் மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. அமைப்புசாரா தொழிலில் 3 கோடியே 70 லட்சம் வேலைகள் பறிபோயுள்ளது.

விவசாய துறையிலும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவசாய வளர்ச்சி 4 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த அரசின் ஒரு ஆண்டின் செயல்படாத தன்மையையும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செய்த துரோகத்தையும் இந்த உரையில் குறிப்பிடவில்லை. காங்கிரஸ் வருகிற நாட்களில் உண்மை நிலையையும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டுவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News