செய்திகள்

ம.பி: போலீஸ் வேடத்தில் வந்து இளம்பெண்ணை கடத்திய கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2018-01-29 16:34 IST   |   Update On 2018-01-29 16:34:00 IST
மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் போலீஸ் வேடத்தில் வந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள பாம்குர்கா கிராமத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மயங்கி கிடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் வேனில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சாலையில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். திடீரென அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டினார்.

மேலும், அங்கு பதுங்கியிருந்த 4 பேர் போலீசாரை சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசின் காக்கி சீருடையை கழட்டி அணிந்து கொண்டதுடன் அவர்களின் துப்பாக்கியையும் திருடிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பல் போலீஸ் வேனில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி இந்த வீட்டிலிருந்து அவரச உதவி கேட்டு அழைப்பு வந்ததாக கூறினர். இதனை மறுத்த அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் அடைத்தனர். அப்பெண்ணையும் அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்ற பின் தந்தை மற்றும் சகோதரனை தள்ளி விட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றனர்.

இந்த கடத்தல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News