செய்திகள்

உடலில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலை கிடையாது: டெல்லி ஐகோர்ட்

Published On 2018-01-29 05:48 IST   |   Update On 2018-01-29 05:48:00 IST
உடம்பில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலையில் சேரமுடியாது என்பதை டெல்லி ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. #Tattoo #AirForce
புதுடெல்லி:

உடம்பில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலையில் சேரமுடியாது என்பதை டெல்லி ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.

விமானப்படையில் சேருவதற்கான தனது பணி நியமன ஆணை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவர் உடம்பில் நிரந்தரமான டாட்டூ எனப்படும் பச்சை குத்தியிருந்ததால், பணி நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.



இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது டாட்டூ வரைந்திருந்தால் வேலை கிடையாது என கூறப்பட்டுள்ளது. விமானப்படை விளம்பரத்தில் கூறப்பட்ட விதிவிலக்கின் கீழ் மனுதாரர் வரமாட்டார். உடம்பில் டாட்டூ குத்தியிருந்தால் அதுதொடர்பான புகைப்படத்தை அனுப்ப வேண்டுமென்ற விதிமுறையையும் மனுதாரர் முறைப்படி செய்யவில்லை. அதனால் வேலை நியமனத்தை ரத்து செய்தது செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது.

பச்சை குத்துவது போல் உடலில் டாட்டூ வரைந்திருந்தால் வேலை கிடையாது என இந்திய விமானப் படை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Tattoo #AirForce #tamilnews 

Similar News