செய்திகள்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை: பிரதமர் மோடி

Published On 2018-01-28 10:00 GMT   |   Update On 2018-01-28 10:00 GMT
ஊழல் வழக்கில் சிக்கிய 3 முதல் மந்திரிகள் சிறை சென்றுள்ள நிலையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் சாரண இயக்க மாணவர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆதார் திட்டத்தின் மூலம் எவ்வித சேதாரமும் இல்லாமல் அரசின் உதவிகள் உரியவரை நேரடியாக சென்று சேர்வதாகவும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னர் தவறான கைகளுக்குப் போய் சேர்ந்த அரசு பணம் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆதார் திட்டத்தின் மூலம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், பணக்காரர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையால் ஒன்றும் செய்ய முடியாது என மக்கள் முன்னர் நினைத்திருந்தனர். இனிமேல் அது நடக்காது. பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், அதே மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல் மந்திரி ஜகந்நாத் மிஸ்ரா, அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓ.பி.சவுதாலா ஆகியோர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஊழலை ஏற்றுகொள்ள இந்திய இளைஞர்கள் மறுத்து வருகின்றனர். இந்த போராட்டம் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துக்கான இந்த போராட்டம் நிற்காது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News