செய்திகள்

குஜராத்: பத்மாவத் படம் பார்க்கப் போகிறேன் என்பவருக்கு விழுந்த ’தர்ம அடி’

Published On 2018-01-27 15:42 GMT   |   Update On 2018-01-27 15:42 GMT
கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள ’பத்மாவத்’ படம் பார்க்கப் போகிறேன் என்று கூறிய ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவருக்கு விழுந்த ’தர்ம அடி’ வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழில் நகரமான வதோதரா பகுதியை சேர்ந்த உபேந்திரா சிங் ஜாதவ் என்பவர் கடந்த 24-ம் தேதி பஹருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் நகருக்கு சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்திருந்த உபேந்திரா, வதோதராவில் உள்ள தனது நண்பரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

ஊர் நிலவரத்தை கேட்டறிந்துகொண்ட உபேந்திரா, குஜராத் மாநிலத்தில் பத்மாவத் படம் ரிலீஸ் ஆகாததால் மும்பைக்கு சென்று பத்மாவத் படம் பார்க்கப் போவதாக நண்பரிடம் தெரிவித்தார்.

இதை அருகாமையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த இருவர், ‘பத்மாவத் படத்தை யாரும் பார்க்க கூடாது என்று கர்னி சேனா அமைப்பு தடை விதித்துள்ள நிலையில் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவனாக இருந்துகொண்டு, மும்பைக்குப்போய் அந்தப் படத்தை பார்க்கப் போகிறாயா?’ என்று கேட்டு உபேந்திராவை ‘நைய்யப் புடைத்தனர்’

அவரை தாக்கிய காட்சியை வீடியோவாக பதிவு செய்ததுடன் உபேந்திராவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிகொண்டு விடுவித்தனர். மேலும், உபேந்திராவை தாக்கும் வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்தனர்.

இதனால், கடும் அவமானத்துக்கு உள்ளான உபேந்திரா தன்னை தாக்கிய இருவர்மீதும் அங்கலேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, உபேந்திரவை தாக்கிய பார்கவ்சின்ஹ் பாதியார் மற்றும் ரஞ்சித் ஃபுவாத் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News