செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் இன்றும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

Published On 2017-12-28 19:42 IST   |   Update On 2017-12-28 19:42:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில்ல் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் டிக்வர் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் இன்று காலை முதல் அத்துமீறிய வகையில் சுமார் 3 மணிநேரம் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளின் மீதும் பாகிஸ்தான் படைகள் இன்று தாக்குதல் நடத்தின. 

பூஞ்ச் மாவட்டத்தின் காரி கர்மரா செக்டார் பகுதியில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் மீண்டும் இருதரப்பு ராணுவத்தினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இரு இடங்களிலும் இந்திய வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்றைய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Similar News