செய்திகள்

ராஜஸ்தானில் அரசு விடுதிகளில் தேசியகீதம் பாடுவது கட்டாயம்

Published On 2017-11-28 21:22 GMT   |   Update On 2017-11-28 21:22 GMT
அரசு மாணவர் விடுதிகளிலும், அரசு உதவி பெறுகிற மாணவர் விடுதிகளிலும் தேசியகீதம் பாடுவதை கட்டாயம் ஆக்கி ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

அரசு மாணவர் விடுதிகளிலும், அரசு உதவி பெறுகிற மாணவர் விடுதிகளிலும் தேசியகீதம் பாடுவதை கட்டாயம் ஆக்கி ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநிலத்தின் சமூக நீதி, அதிகாரம் வழங்கல் துறை மந்திரி அருண் சதுர்வேதி கூறுகையில், “காலை 7 மணிக்கு விடுதிகளில் மாணவர்கள் ஜன கண மன என தொடங்கும் நமது தேசிய கீதத்தை பாடுவார்கள். அப்போது விடுதிக்காப்பாளர் உடன் இருக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் மனங்களில் தேசியத்துவ உணர்வு வளரும்” என்று குறிப்பிட்டார்.

இந்த உத்தரவு அரசியல் சட்ட நாளான கடந்த 26-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ராஜஸ்தானில் 800 விடுதிகளில் 40 ஆயிரம் மாணவர்கள் தங்கிப்படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News