செய்திகள்

உ.பி: மத்திய அனல் மின்நிலைய விபத்தில் பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

Published On 2017-11-02 21:14 IST   |   Update On 2017-11-02 21:14:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலம் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ள நிலையில், இவ்விபத்து குறித்து மாநில அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள மத்திய அனல் மின்நிலைய கொதிகலன் நேற்று மாலை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட மத்திய மின் துறை மந்திரி ஆர்.கே சிங், மனித தவறுகளால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவில்லை. விபத்து குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகின்றது என கூறினார்.

இதற்கிடையே, தேசிய அனல் மின்நிலைய ஆணையம் சார்பில் மாநில அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Similar News