செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி கணக்குகளை தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு

Published On 2017-10-30 12:30 GMT   |   Update On 2017-10-30 12:30 GMT
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்யும் காலக்கெடுவை மத்திய அரசு இன்று நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வரி விதிப்பு முறையை ஒரேவிதமாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின்கீழ் சுமார் 30 லட்சம் தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் போதும் நான்கு தவணைகளாக வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிதியாண்டின் இரண்டாவது (ஜூலை மாத) கணக்குகளை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை சுமார் 12 லட்சம் நிறுவனங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், இரண்டாவது (ஜூலை மாத) கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதியை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதேபோல், மூன்றாவது காலாண்டு கணக்குளை தாக்கல் செய்யும் தேதியும் நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 11-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News