செய்திகள்

முதல்-மந்திரியின் வேண்டுகோளை ஏற்று வரதட்சணையை திருப்பிக்கொடுத்த மணமகனின் தந்தை

Published On 2017-10-30 04:08 GMT   |   Update On 2017-10-30 04:08 GMT
முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் வேண்டுகோள் பற்றி அறிந்த ஹரிந்தர்குமார் சிங், தான் மணமகள் குடும்பத்தினரிடம் வாங்கிய வரதட்சணையை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தார்.
பாட்னா:

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற ஒரு விழாவில், “உங்கள் பிள்ளைகளின் திருமணத்தின்போது வரதட்சணை வாங்காதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். போஜ்பூர் மாவட்டம் பர்நவ் கிராமத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஹரிந்தர்குமார் சிங் தனது மகன் பிரேம்ரஞ்சன் சிங்குக்கு அனுராதா என்ற பெண்ணை டிசம்பர் 3-ந் தேதி திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தார். இதற்காக அனுராதா குடும்பத்தினர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்தனர்.

முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் வேண்டுகோள் பற்றி அறிந்த ஹரிந்தர்குமார் சிங், தான் மணமகள் குடும்பத்தினரிடம் வாங்கிய வரதட்சணையை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தார். இதனை அறிந்த நிதிஷ்குமார் தனது அலுவலகத்துக்கு ஹரிந்தர்குமாரை வரவழைத்து கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்தார்.



ஹரிந்தர்குமார் இந்த சமுதாயத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். மாநில அரசின் வரதட்சணை மற்றும் குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்றும் நிதிஷ்குமார் பாராட்டினார்.
Tags:    

Similar News