செய்திகள்

தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்: முலாயமுக்கு அழைப்பு விடுத்த அகிலேஷ்

Published On 2017-09-28 11:50 GMT   |   Update On 2017-09-28 11:50 GMT
அடுத்த வாரம் நடைபெற உள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு முலாயம் சிங்குக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது.

இதைதொடர்ந்து, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் முலாயம் சிங் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரது சகோதரர் சிவபால் யாதவ் விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு முலாயம் சிங் உடன்படவில்லை.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், இன்று முலாயம் சிங் வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது அடுத்த வாரம் நடைபெற உள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. சுனில் சிங் யாதவ் கூறுகையில், கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தை முலாயம் சிங்கை இன்று அவரது வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்தார். அப்போது ஆக்ராவில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, முலாயம் சிங் புதுக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News