செய்திகள்

இந்தியா-நேபாளம் எல்லையில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Published On 2017-09-23 12:18 GMT   |   Update On 2017-09-23 12:18 GMT
இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சின்காகி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் சின்காகி பகுதியில் உள்ள மாகாதேவ் தண்டா கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த இஸ்ரார், புன்னு, முகமது ஷமி மற்றும் ரஃபிக் ஆகிய நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 20 துப்பாக்கிகள் மற்றும் அதை செய்வதற்கான உதிரி பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சட்ட விரோதமாக ஆயுதம் கடத்துவதை ஒப்புக்கொண்டனர். மேலும் மற்ற நாடுகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News