செய்திகள்

மகாராஷ்டிராவில் புகார் அளிக்க பொதுமக்கள் இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்

Published On 2017-08-31 10:44 GMT   |   Update On 2017-08-31 10:44 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் புகாரை ஆன்லைன் மூலமாக அனுப்பும் புதிய வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தானேவில் காசர்வாடாவலி மற்றும் கால்வா பகுதியில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆன்லைன் மூலம் புகார் அனுப்பும் முறையை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரை வீட்டிலிருந்தே அனுப்பலாம். காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த முறை புனேவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அரசு பள்ளிகளில் வைஃபை வசதி மற்றும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கான இயந்திரமயமான சமுதாய சமையலறை கூடத்தையும் முதல்வர் பட்னாவிஸ் அறிமுகப்படுத்தினார். இந்த சமையலறை கூடம் மூலம் மாஜிவாடா, மன்பாடா மற்றும் வார்டக்நகர் பகுதிகளைச் சேர்ந்த 26 பள்ளிகளில் பயிலும் 8 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.


Tags:    

Similar News