செய்திகள்

ம.பி.யில் பன்றிக்காய்ச்சலுக்கு கடந்த இரண்டு மாதத்தில் 23 பேர் பலி

Published On 2017-08-30 23:55 GMT   |   Update On 2017-08-30 23:55 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 51 மாவட்டங்களில் 14 மாவட்டங்களை H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று தாக்கியுள்ளது. நேற்று மேலும் 2 பேர் இந்த நோய்த்தொற்றால் பலியாகி உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இந்த நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தையும், மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்ததையடுத்து இந்நோயின் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 582 பேரிடம் நடத்தப்பட்ட பன்றிக்காய்ச்சல் சோதனையில் 113 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று குறித்து மாநில பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ரஸ்தம் சிங் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:-

அசுத்தமான கைகளினால் ஒருவரின் முகத்தைத் தொட்டாலே இந்த நோய்த்தொற்று விரைவாக பரவும். எனவே நேரடி உடல்தொடர்பை குடிமக்கள் தவிர்க்கவேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News