செய்திகள்

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அமித் ஷா, ஸ்மிருதி இரானி போட்டி

Published On 2017-07-26 16:00 GMT   |   Update On 2017-07-26 16:01 GMT
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.



கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற குழு செயலாளர் ஜே.பி. நட்டா கூறுகையில், ‘குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியும் குஜராத்தில் இருந்து போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. கட்சி வளர்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் அமித் ஷாவை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் களமிறக்குவதைவிட, அவரது பணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கு பா.ஜ.க. முடிவு எடுத்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Tags:    

Similar News