செய்திகள்

பாவனா கடத்தல் வழக்கில் 2 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை

Published On 2017-07-17 11:50 GMT   |   Update On 2017-07-17 11:50 GMT
பாவனா கடத்தல் வழக்கில் அடுத்ததாக 2 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பாவனா கடத்தல் வழக்கில் தொடர்ந்து போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் தற்போது விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தோமஸ் ஆவார். நடிகை பாவனாவை கடத்திய கும்பல் அவரை விடுவித்த பிறகு பாவனா டைரக்டர் லால் என்பவர் வீட்டில்தான் தஞ்சம் அடைந்தார். அப்போது தோமஸ் எம்.எல்.ஏ. லால் வீட்டிற்கு சென்று உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இன்னொருவர் ஆலுவா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அன்வர்சாதத். நடிகர் திலீப்புக்கு சொந்தமான ‘டி’ சினிமாஸ் என்ற தியேட்டர் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டபோது அன்வர்சாதத் தலையீட்டின் பேரில் இந்த விசாரணை பாதியில் கைவிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் இந்த 2 எம்.எல்.ஏ.க்களும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ளனர். எனவே ஆலுவா போலீசார் திருவனந்தபுரம் சென்று அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News