செய்திகள்

இந்திய விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

Published On 2017-07-06 13:21 IST   |   Update On 2017-07-06 13:21:00 IST
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில், விமானத்திலிருந்த இரு பைலட்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில், விமானத்திலிருந்த இரு
பைலட்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பலேசர் என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-23 ரக விமானமானது பயிற்சியில்
ஈடுபட்டு வந்தது. அப்போது, திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு விமானம் தடுமாற ஆரம்பித்தது. இதனையடுத்து, விமானம் பைலட்டுகளின்
கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையை நோக்கி மோதும் வண்ணம் சென்றுள்ளது.

தரையில் பயங்கரமாக மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்தது. இதனையடுத்து, விமானத்திலிருந்த இரு பைலட்டுகள் பத்திரமாக உயிருடன் மீட்கப்படனர்.

இந்த விபத்து குறித்து உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

Similar News