செய்திகள்

புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் பதவியேற்றார்

Published On 2017-07-03 12:28 IST   |   Update On 2017-07-03 12:28:00 IST
மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.கே. வேணுகோபால் பதவியேற்றார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) இருந்து வந்த முகில் ரோஹத்கி-யின் 3 ஆண்டு பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முன் வந்தது. ஆனால் அவர் தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் புதிய அட்டர்னி ஜெனரலாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். 

இந்நிலையில், மத்திய அரசின் தலைமை வக்கீலாக கே.கே.வேணுகோபால் இன்று பதவியேற்றார். 83 வயதான வேணுகோபால் கேரள மாநிலம் காசர்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றியவர் ஆவார்.

முகில் ரோஹத்கியை தொடர்ந்து நாட்டின் 15-வது அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News