செய்திகள்

சசிகலா பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் கமி‌ஷனரிடம் தம்பிதுரை விளக்கம்

Published On 2017-03-16 09:32 GMT   |   Update On 2017-03-16 09:32 GMT
சசிகலா நியமனம் தொடர்பாகவும் அவர் பொதுச்செயலாளராக இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது சட்ட விதிகளுக்கு முரணானது என்று ஓ.பி.எஸ். அணியினர் பிரச்சனை கிளப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு சசிகலா விளக்கம் அளித்தார்.

அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் அந்த விளக்கத்திற்கு பதில் மனு அளித்தனர். டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் அவர் தனது ஆதரவு எம்.பி.க்களுடன் சென்று இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் சசிகலா ஆதரவு எம்.பி.க்கள் இன்று தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் சைதியை சந்தித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் டாக்டர் வேணுகோபால், நவநீத கிருஷ்ணன், வைத்திலிங்கம் எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

சசிகலா நியமனம் தொடர்பாகவும் அவர் பொதுச்செயலாளராக இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News