செய்திகள்

நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி - பிரதமருக்கு முக்கிய வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து

Published On 2017-03-15 14:41 IST   |   Update On 2017-03-15 14:41:00 IST
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப்பிடித்துள்ளதற்கு பிரான்ஸ் அதிபர் மற்றும் அபுதாபி இளவரசர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரிஸ்:

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க அபார வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சிறிய கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடியின் பிரச்சாரமே முக்கிய காரணம் என அக்கட்சியினர் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளதற்கு பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

மேலும், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஷயாத் அல் நஹ்யான், கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

Similar News