செய்திகள்

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று நிலநடுக்கம்

Published On 2017-03-14 10:22 IST   |   Update On 2017-03-14 10:22:00 IST
வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:

வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.



இதே நேரத்தில் இந்தோனேசியாவிலும் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா பகுதியில் இன்று அதிகாலை 5.48 மணியளவில் 3.6 ரிக்டர் அலகு கொண்ட மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Similar News