செய்திகள்

மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு

Published On 2017-03-12 04:45 IST   |   Update On 2017-03-12 04:45:00 IST
உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும், எனவே உத்தரபிரதேசத்தில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி அகிலேஷ் யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது, “இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று மக்கள் கூறினால் நிச்சயம் விசாரிக்கவேண்டும். விசாரணையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி எதுவும் இல்லையென்றால் அதை உறுதிபடுத்தி அறிவிக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்.

சமாஜ்வாடியின் தேர்தல் தோல்வி குறித்து கூறுகையில், “தவறு எங்கே நடந்தது என்பதை ஆய்வு செய்வோம். அதன்பிறகே இதற்கான பொறுப்பை நிர்ணயிப்போம். சில நேரங்களில் ஜனநாயகத்தில் போலியான வாக்குறுதிகளை மக்கள் நம்பி விடுவதும் உண்டு” என்றார். 

Similar News