செய்திகள்

பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி தொடர தேர்தல் கமிஷன் அனுமதி

Published On 2017-01-28 09:44 GMT   |   Update On 2017-01-28 09:44 GMT
வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றிவரும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்ப இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த வானொலி உரையின்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை தொடர்பாக பேசும் பிரதமர் புதிதாக சில திட்டங்களுக்கான அறிவிப்பையும் வெளியிடுவதுண்டு.

உ.பி., பஞ்சாப், மேகாலயா, உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில தேர்தல்கள் வரும் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8-ம் தேதிவரை நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒலிபரப்பு தொடர்வதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனை மத்திய அரசு கேட்டிருந்தது.

இதைனையேற்ற, தேர்தல் கமிஷன் நாளை (29-ம் தேதி) ஒலிபரப்பாகவுள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துள்ளது. அடுத்த மாதம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் நாளைய வானொலி உரை தேர்வுகளுக்கு தயாராகும்படி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

Similar News