செய்திகள்

பெலகாவியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கர்நாடக மந்திரி

Published On 2017-01-28 10:38 IST   |   Update On 2017-01-28 10:38:00 IST
பெலகாவியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கர்நாடக உணவுத்துறை மந்திரி யு.டி. காதர் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு விமான நிலையம் சென்றடைந்தார்.
பெங்களூரு:

கர்நாடக உணவுத்துறை மந்திரி யு.டி. காதர், நேற்று பெலகாவியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும், விமான நிலையம் நோக்கி காரில் சென்றார். அந்த நேரத்தில், பெலகாவி மாவட்டத்தில் நடந்த விழாக்களில் கலந்து கொள்ள அந்த வழியாக முதல் மந்திரி சித்தராமையா காரில் சென்றதால், சாலையில் கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டது.

இதனால், மந்திரி காதர் சென்ற கார், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. பெங்களூருக்கு செல்ல விமானத்தை பிடிக்க அவசரமாக சென்று கொண்டிருந்த மந்திரி காதருக்கு, டிராபிக் ஜாம், டென்சனை ஏற்படுத்தி விட்டது. உடனடியாக அவர் காரிலிருந்து இறங்கி, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரிடம் லிப்ட் கேட்டு, விமான நிலையம் நோக்கி பறந்தார்.

Similar News