செய்திகள்

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் கடாகின் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் - பிரதமர் இரங்கல்

Published On 2017-01-26 19:26 IST   |   Update On 2017-01-26 19:26:00 IST
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாகின், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். காடாகின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய நாட்டுக்கான ரஷ்ய தூதராக 2009-ம் ஆண்டு முதல் அலெக்ஸாண்டர் கடாகின் பணியாற்றி வந்தார். இந்தியா - ரஷ்யா இடையே உள்ள உறவுக்கு பாலமாக திகழ்ந்தவர். இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களில் இவரது பங்கு முக்கியமானது. சரளமாக இந்தி மொழியை பேசவும், எழுதவும் அறிந்தவர். 

இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 67 வயதான கடாகின், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

கடாகின் மறைவுக்கு ரஷ்ய நாட்டுத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி, ” கடாகின் இந்தியாவிற்கு சிறந்த நண்பனாக திகழ்ந்தவர். இந்தியா - ரஷ்யா இடையே  உறவு மேம்பட சிறந்த முறையில் பணியாற்றினார்.அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது” என தெரிவித்துள்ளார்.
 
கடாகின் ஏற்கனவே 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை இந்தியத் தூதராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடாகின் உடலை அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Similar News