செய்திகள்

மந்திரி சபை விரிவாக்கம்: அருணாசல பிரதேசத்தில் 3 புதிய மந்திரிகள் நியமனம்

Published On 2017-01-15 23:55 GMT   |   Update On 2017-01-15 23:55 GMT
பீமா காண்டு தலைமையிலான மந்திரி சபையில் அருணாசல பிரதேசத்தில் 3 பேர் புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர்.
இடாநகர்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பீமா காண்டு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அங்கு திடீர் திருப்பமாக முதல்-மந்திரி பீமா காண்டு தலைமையில் 33 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வி.ல் இணைந்ததையடுத்து பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது.

இந்த நிலையில் பீமா காண்டு தலைமையிலான மந்திரி சபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் டாகோ (கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் விளையாட்டு), தங்கா பையலிங் (கிராம வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்ராஜ்), டாகம் பாரியோ (குடிநீர் வாரியத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை) ஆகிய 3 பேர் புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர்.

மாநில கவர்னர் சண்முகநாதன் 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

Similar News