செய்திகள்

மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 3 போலீசார் பலி

Published On 2016-12-15 14:56 GMT   |   Update On 2016-12-15 16:49 GMT
மணிப்பூரில் நாகா தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் மூன்று போலீசார் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் நாகா இனத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். சில அமைப்புகள் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அவர்களை மத்திய அரசு தீவிரவாதம் பட்டியலில் சேர்த்துள்ளது.

நாகா இனத்தினர் அதிக அளவில் வசிக்கும் மலைகள் நிறைந்த சண்டேல் மாவட்டத்திற்கு மணிப்பூர் மாநில முதல்வர் அரசு நலத்திட்டங்களை திறந்து வைக்க சென்றார். அப்போது அவர் பாதுகாப்பிற்காக போலீசார் சென்றனர்.

ஒரு அரசு நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் செல்லும்போது சாலையோரம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதா என பரிசோதிக்க போலீசார் செல்வது வழக்கம். அப்படி சண்டேல் மாவட்டத்தில் இருந்து டெங்நௌபால் மாவட்டத்தை புதிதாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புது மாவட்ட திறப்பு விழாவிற்கு முதல்வர் இபோபி சென்றார். இதுகுறித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த சென்ற போலீசார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதேபோல் மற்றொரு இடத்திலும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த இரண்டு தாக்குதலிலும் மூன்று போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர்.

Similar News