செய்திகள்

ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம்: யூடியூபில் வெளியானது

Published On 2016-11-28 04:14 GMT   |   Update On 2016-11-28 05:04 GMT
இந்தியாவில் முதன்முறையாக ஒரே காட்சியில் படப்பதிவு செய்யப்பட்ட ‘மகள்’ என்ற குறும்படம் பிரபல பொழுதுப்போக்கு வலைத்தளமான யூடியூபில் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்:

கே.எம்.ஆர். ரியாஸ் என்பவரின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகள்’ குறும்படம் சிறுமிகள் மற்றும் இளம்வயது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வல்லுறவு போன்ற சமூகக் கொடுமைகளை கண்டும்காணாமல் போகும் இன்றைய சமுதாயத்தின் அவலத்தை சித்தரிக்கும் விதமான கதையம்சத்துடன் படைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த குறும்படம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அடர்த்தியான காட்டுக்குள் நடக்கும் ஒரு கொடூரமும் (கதை சொன்னால் குறும்படங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும். கீழேயுள்ள ‘லிங்க்’கில் சென்று பார்த்து தெரிந்துகொள்வதுதான் அந்த படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் நாம் செய்யும் கைமாறாக அமைய முடியும்) அந்த கொடூரத்தை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ முன்வராத ஒருவனின் மனசாட்சி பேசும் குரலும் சுமார் ஆறுநிமிட காட்சியாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம் என்ற பெருமைக்குரிய இந்த முயற்சியில் சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கும் சங்கதி என்ன என்பதை அறிய..,

https://www.youtube.com/watch?v=SMURMrJLu94


Similar News