செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: பாராளுமன்றம் 28-ம் தேதிவரை ஒத்திவைப்பு

Published On 2016-11-25 07:39 GMT   |   Update On 2016-11-25 07:40 GMT
பழைய 500 மற்றும் 1000 ரூபாயை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவையை வரும் 28-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும் மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தை மையப்படுத்தி, எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவையை 40 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

பின்னர், அடுத்தடுத்து பகல் 12.30 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 12.30 மணிக்கு பின்னர் அவை கூடியதும் இதேநிலை நீடித்ததால் அவையை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் பழைய 500 மற்றும் 1000 ரூபாயை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திவரும் தொடர் அமளியில் முடங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Similar News