செய்திகள்

ரூபாய் நோட்டு பிரச்சினை: உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2016-11-23 22:42 GMT   |   Update On 2016-11-23 22:42 GMT
உத்தரபிரதேசத்தில் தேர்வு கட்டணத்துக்கு பணம் எடுக்க முடியாத விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
பண்டா:

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட மாவை பசர்க் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 18) என்ற மாணவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பணம் எடுப்பதற்காக சுரேஷ் கடந்த சில நாட்களாக வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கியில் அதிக கூட்டம் காணப்பட்டதால், தினந்தோறும் வரிசையில் நின்ற பிறகும் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.

நேற்றுமுன்தினமும் இவ்வாறு வெறுங்கையுடன் திரும்பி வந்த இவர், பணம் எடுக்க முடியாத விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சுரேஷ் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவரது கிராமத்தினர் அந்த வங்கி மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News