செய்திகள்

குரங்கை கொல்பவர்களுக்கு கூலி 500 ரூபாயாக உயர்வு: இமாச்சலப்பிரதேச அரசு அறிவிப்பு

Published On 2016-10-30 11:39 IST   |   Update On 2016-10-30 11:39:00 IST
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் குரங்குகளை கொல்பவர்களுக்கான கூலி 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என இமாச்சலப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
சிம்லா:

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ‘குளுகுளு’ நகரமான சிம்லா உள்ளிட்ட பல பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக வந்து மக்களை தாக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் வருகின்றன.

குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் பெரியளவில் பலனை தரவில்லை. இதையடுத்து, ஒரு குரங்கை பிடித்துக் கொல்பவர்களுக்கு சன்மானமாக 300 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் ஒரு குரங்கை பிடித்து கருத்தடைக்கு உட்படுத்த உதவுபவர்களுக்கு 500 ரூபாய் அளிக்கப்படும் என மாநில வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குரங்குகளை கொல்பவர்களுக்கான கூலி 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், குரங்கை பிடித்து கருத்தடைக்கு உட்படுத்த உதவுபவர்களுக்கு 700 ரூபாயாகவும் இனி அளிக்கப்படும் என மாநில வனத்துறை மந்திரி தாக்குர் சிங் பர்மோரி அறிவித்துள்ளார்.

Similar News