செய்திகள்

ஒடிசா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2016-10-17 18:03 GMT   |   Update On 2016-10-17 18:03 GMT
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி கூறுகையில், “இந்த தீ விபத்து சம்பவம் என்னுடைய மனதை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம் தொடர்பு கொண்ட மோடி, ”தீ விபத்தில் காயமடைந்தவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து வந்து 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News