செய்திகள்

விரைவில் உடல் நலம் பெற ஜெயலலிதாவுக்கு ஜெகன்மோகன் வாழ்த்து

Published On 2016-10-16 11:14 IST   |   Update On 2016-10-16 11:14:00 IST
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி டுவிட்டரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நகரி:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்து வருகிறார்கள். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி டுவிட்டரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-

புரட்சி தலைவி ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பொது மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார். நடிகையும், நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா கூறுகையில், பெண்கள் அரசியலுக்கு வர முன்னுதாரணமாக இந்திரா காந்திக்கு பிறகு ஜெயலலிதா திகழ்கிறார். மனதைரியம் மிக்கவர். அவர் சீக்கிரம் உடல் நலம் பெற்று மீண்டும் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News