செய்திகள்
மைத்துனி அளித்த பாலியல் புகார்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் கைது
டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் மீது மைத்துனி அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்துவந்த போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லி வக்ஃபு வாரியத் தலைவராக பதவி வகித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் என்பவர் மீது அவரது மைத்துனி சமீபத்தில் போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அமானத்துல்லா கான் என்னை மிரட்டி பாலியல் ரீதியாக தன்னுடன் தனிமையில் இருக்குமாறு என்னை வற்புறுத்துகிறார். இதற்காக பல்வேறு விதத்திலும் அவர் எனக்கு நிர்ப்பந்தம் கொடுத்தார். மேலும், அவருடன் சேர்ந்து என் கணவரும் வரதட்சணை வாங்கி வருமாறு என்னை கொடுமைப்படுத்துகிறார். அமானத்துல்லாவுடன் இணங்கிச் செல்லுமாறும் வற்புறுத்துகிறார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஜாமியா நகர் போலீசார் அமானத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, தன்மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் டெல்லி வக்பு வாரிய தலைவர் பதவியை அமானுல்லா கான் ராஜினாமா செய்ய முன்வந்ததும், அவரது ராஜினாமாவை ஏற்க ஆம் ஆத்மி கட்சி தலைமை மறுத்து விட்டதும், சில தினங்களுக்கு முன்னர் தன்னை கைது செய்யுமாறு போலீசில் அமானத்துல்லா கான் சரண் அடைந்ததாகவும், அவரை கைது செய்ய போலீசார் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியானதும் நினைவிருக்கலாம்.