செய்திகள்

பணி நியமனத்தில் ஊழல் புகார்: டெல்லி மகளிர் ஆணையத் தலைவி மீது வழக்கு

Published On 2016-09-21 09:39 IST   |   Update On 2016-09-21 09:39:00 IST
பணி நியமனத்தில் ஊழல் புகார் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுவாதி மாலிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
புதுடெல்லி:

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுவாதி மாலிவால் உள்ளார்.

இந்தநிலையில், மகளிர் ஆணையத்தின் பணி நியமனங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் தலைவி பர்கா சுக்லா சிங் செய்த புகாரின் பேரில், டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தில் முறையான தகுதியில்லாமல் 85 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பர்கா சுக்லா சிங் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக சுவாதி மாலிவாலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்துதான் அவர்மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120-பி (குற்ற சதி), 409 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவு 13(டி) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தலைவர் எம்.கே. மீனா கூறினார்.

Similar News