செய்திகள்

உரி தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு: விரைவில் விசாரணை

Published On 2016-09-20 06:32 GMT   |   Update On 2016-09-20 06:32 GMT
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் மரபணுக்களை சேகரித்து விரைவில் விசாரணை தொடங்கவுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது கடந்த 18-ம் தேதி ஜெய்ஷ்-இ-முஹம்மது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு படாமி பாக் கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் உரி தாக்குதலில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த அத்துமீறல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைவில் உரி நகருக்கு செல்கின்றனர்.

தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளின் மரபணுக்களை சேகரித்து, விசாரணை தொடங்கவுள்ளது.

Similar News