செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடி அளவிலான 7 ஆயிரம் கிலோ தங்க கடத்தல் கண்டுபிடிப்பு

Published On 2016-09-19 15:51 IST   |   Update On 2016-09-19 15:51:00 IST
மத்திய வருவாய்துறை புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த இரு ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் கிலோ தங்க கடத்தலை கண்டுபிடித்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் மியான்மர் நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 10 கிலோ தங்கத்தை சமீபத்தில் பறிமுதல் செய்த மத்திய வருவாய்துறை புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சுமார் 3.1 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த தங்கத்தை கடத்திவந்த நபர்களை கைது செய்து விசாரித்து வந்தனர்.

அப்போது மியான்மர் நாட்டில் இருந்து டெல்லி மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வழியாக கவுகாத்தி நகரை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், டெல்லியில் உள்ள அவரது கூட்டாளியும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் விலையுயர்ந்த சரக்குகள் என்ற போர்வையில் இதுபோல் 617 முறை மியான்மர் நாட்டில் இருந்து இந்த தங்க கடத்தல் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய வருவாய்துறை புலனாய்வுத்துறை கண்டுபிடித்த தங்க கடத்தல் வழக்குகளில் டெல்லி அதிகாரிகள் கண்டுபிடைத்த இந்த வேட்டைதான் மிகப்பெரிய வழக்கு என தெரியவந்துள்ளது.

Similar News