செய்திகள்

பழங்குடி மக்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோடி

Published On 2016-09-17 12:41 GMT   |   Update On 2016-09-17 12:41 GMT
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் பிறந்தநாளை கொண்டாடினார்.
லிம்கேடா:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டிலும் தனது பிறந்தநாளின்போது குஜராத் மாநிலம், காந்தி நகரில் தனது சகோதரருடன் வசித்துவரும் தாயார் ஹிரா பென்னை சந்தித்து அவரிடம் நல்லாசிகளை பெறுவது வழக்கம். அவ்வகையில், தனது 66-வது பிறந்தநாளான இன்று காலை ரய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தன் தாயார் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.

அவரிடம் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்த மோடி, அங்கிருந்து புறப்பட்டு குஜராத் மாநில கவர்னர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தஹோட் மாவட்டத்துக்கு சென்ற அவர், லிம்கேடா கிராமத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அப்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட மஹோட் மாவட்டத்திற்காக ரூ.4,817 கோடி மதிப்பிலான நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். அங்கு உரையாற்றி முடிந்ததும் நவ்சாரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Similar News