செய்திகள்

ஆம் ஆத்மியில் இணைய எந்த நிபந்தனையும் சித்து விதிக்கவில்லை: கெஜ்ரிவால்

Published On 2016-08-20 05:09 IST   |   Update On 2016-08-20 05:09:00 IST
ஆம் ஆத்மி கட்சியில் இணைய சித்து எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, முடிவெடுக்க கூடுதல் அவகாசம் மட்டுமே அவர் கேட்டுள்ளர் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பா.ஜனதாவின் மேல்–சபை எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகினார். மேலும் தனது எம்.பி. பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியிருந்தார்.

அப்போது ஆம் ஆத்மியில் சேர்வதற்கு கெஜ்ரிவாலிடம், சித்து பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவல்களை ஆம் ஆத்மி தலைவர் கெஜிரிவால் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘கடந்த வாரம் சித்து என்னை சந்தித்தார். அப்போது அவர் ஆம் ஆத்மியில் சேர்வதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது குறித்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் மட்டுமே கேட்டார். அதை மதிக்கிறோம். மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான அவர் சிறந்த பண்புகளை உடையவர். அவர் ஆம் ஆத்மியில் இணைந்தாலும், இல்லையென்றாலும் அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.

Similar News