செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பஸ்- ஜீப் மோதல்: 10 பேர் பலி

Published On 2016-08-18 19:18 IST   |   Update On 2016-08-18 19:19:00 IST
மத்திய பிரதேசத்தில் பஸ்- ஜீப் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
டிண்டோரி (ம.பி.):

மத்திய பிரதேசத்தில் ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஜீப்பில் பியோஹராவில் இருந்து பிபாரியாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த பஸ் மீது ஜீப் பயங்கரமான மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சமீபத்தில் திருமணம் முடிந்த ஒரு புதுமண தம்பதியும் அடங்குவர். இறந்தவர்களில் ஐந்து பேர் பெயர் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஐந்துபேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் நிதியுதவ வழங்க உத்தரவிட்டுள்ளார்.

விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News