செய்திகள்

முதல் முறையாக இந்திய-சீனா எல்லையில் ராணுவ வீரர்களுக்கு விலையுயர்ந்த டொயோட்டா மற்றும் போர்டு எஸ்.யு.வி.-கள்

Published On 2016-05-15 20:05 IST   |   Update On 2016-05-15 20:05:00 IST
முதல் முறையாக இந்திய-சீனா எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு விலையுர்ந்த எஸ்.யு.வி.-கள் கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

இதுவரை இந்திய எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களின் போக்குவரத்துக்கு வழக்கமான கவச வண்டிகள் தான் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் முதல் முறையாக இந்திய-சீன எல்லை படை வீரர்களுக்கும், இந்திய-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) வீரர்களுக்கும் அதிநவீன  விலையுயர்ந்த எஸ்.யு.வி.-கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் தலா இரண்டு டொயோட்டா பார்சூனர் மற்றும் போர்டு எண்டோவர் கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை தலா சுமார் 25 ரூபாய் மதிப்புடையவை. இந்திய-திபெத்திய எல்லை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13 ஆயிரம் அடிகள் உயரத்தில் அமைத்துள்ளது. அதேபோல் அருணாச்சால மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய-சீன எல்லை கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடிகள் உயரத்தில் அமைத்துள்ளது.

இது குறித்து இந்திய-திபெத்திய எல்லை போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரல் கிருஷ்ணா சவுத்ரி கூறுகையில் “அதிக உயரத்தில் இருக்கும் எல்லைப் பகுதியில் பயன்படுத்துவதற்கு அதிக ஆற்றல்மிக்க எஸ்.யு.வி.-கள் தேவைப்பட்டது. எங்கள் கோரிக்கையை ஏற்று உள்துறைத் அமைச்சகம் 4 எஸ்.யு.வி.-களை வாங்க அனுமதித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Similar News