செய்திகள்

கைபேசியை காணவில்லை என மத்திய மந்திரி போலீசில் புகார்

Published On 2016-05-15 15:18 IST   |   Update On 2016-05-15 15:18:00 IST
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தனது கைபேசியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
 ஐதராபாத்:

மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தனது கைபேசியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

தனது கைபேசியை காணவில்லை என மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஐதராபாத்தை அடுத்துள்ள முஷீராபாத் அருகே ராம்நகரில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்த கைபேசி காணாமல் போனதாக இன்று மந்திரி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Similar News