செய்திகள்
சீன எதிர்ப்பாளர் டோல்கன் இசா விசா ரத்து: இந்தியா நடவடிக்கை
சீனாவின் உகியார் மாகாணத்தை சேர்ந்தவர் டோல்கன் இசாவுக்கு வழங்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்தது
புதுடெல்லி :
சீனாவின் உகியார் மாகாணத்தை சேர்ந்தவர் டோல்கன் இசா. சீன எதிர்ப்பாளரான இவர் இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா வருகை தர விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். தொடக்கத்தில் அவருக்கு விசா வழங்கப்பட்டது.
அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் அவரை சீன அரசு தீவிரவாதி என அறிவித்துள்ளது. எனவே, அவரது விசாவை ரத்து செய்யும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று டோல்கன் இசாவுக்கு வழங்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்தது.