இந்தியா

தெலுங்கானாவில் மழைக்கு 15 பேர் பலி

Published On 2024-05-28 10:45 IST   |   Update On 2024-05-28 10:45:00 IST
  • மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
  • பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்க கடலில் புதிதாக உருவான ரீமல் புயல் சின்னம் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

ஐதராபாத், நாகர் கர்னூல், மேடக், கங்கா ரெட்டி, மேட்சல், மல்காஜ்கிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இடி மின்னலில் சிக்கி நாகர் கர்னூல் மாவட்டத்தில் 7 பேரும், ஐதராபாத்தில் 2 பேரும், மேடக்கில் 2 பேரும் பலியாகினர். நல்கொண்டா மாவட்டத்தில் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் மல்லேஸ் ( வயது 38), அவரது மகள் அனுஷா (12), மற்றும் சென்னம்மா (38), ராமுடு (36) ஆகியோர் இறந்தனர்.

மேலும் சூறாவளி காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மற்றும் சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் மழைக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News