இந்தியா

ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

Published On 2023-05-08 01:14 IST   |   Update On 2023-05-08 01:14:00 IST
  • விபத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
  • படுகாயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் மன்கொட் செக்டார் பகுதியில் நேற்று சென்றுக் கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

எல்லைப்பாதுகாப்பு படை வீரர்ககளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

மேலும், 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News