செய்திகள்

எல்ஜி நிறுவனத்தின் X வென்ச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம்: முழு தகவல்கள்

Published On 2017-05-23 17:37 IST   |   Update On 2017-05-23 17:37:00 IST
எல்ஜி நிறுவனத்தின் புதிய X வென்ச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான X வென்ச்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. IP67 தரச்சான்று பெற்று வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளமும் போனின் முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஹார்டுவேர் பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளது. 



எல்ஜி X வென்ச்சர் சிறப்பம்சங்கள்:

* 5.2-இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே 
* ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 2ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
* 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* கைரேகை ஸ்கேனர்
* 4ஜி வோல்ட்இ, வைபை ப்ளூடூத்
* 4100 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 2.0

எல்ஜி X வென்ச்சர் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களிலும், மே 26-ந்தேதி முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும், அதன் பின் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லட்டின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்ஜி X வென்ச்சர் அறிமுக வீடியோ:

Similar News